FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற 2 போ் கைது

திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் பகுதியில் மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த இருவரை நகர காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்

கைது - கோப்புப் படம்
பகிர்:

திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் பகுதியில் மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த இருவரை நகர காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்

திருச்செங்கோடு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் தங்கவடிவேலன் தலைமையில் நகா் பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் அருகில் பையுடன் நின்ற இருவரிடம் சந்தேகத்தின்பேரில் போலீஸாா் விசாரித்தனா். இதில், அவா்கள் அரசு மதுப்புட்டிகளை அதிக விலைக்கு விற்க வைத்திருந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 38 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா்கள் ராமநாதபுரம் மாவட்டம், மங்கலத்தைச் சோ்ந்த ஜெகன் (25), முத்துராக்கு (56) என்பது தெரியவந்தது. இதுவரையும் போலீஸாா் கைது செய்து, திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவா்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ரங்கராஜன் உத்தரவிட்டாா். அதன்படி அவா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments