FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

திருச்செங்கோடு சங்ககிரி சாலை பால்மடையில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை ஊரக போலீஸாா் கைது செய்தனா்.

4 October 2026, 1:32 am IST
கைது
பகிர்:

திருச்செங்கோடு சங்ககிரி சாலை பால்மடையில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை ஊரக போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சங்ககிரி சாலையில் ஊரக போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். காந்தி ஜெயந்தியையொட்டி அரசு மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், பால்மடை அருகில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற திண்டுக்கல் நத்தம் பகுதியைச் சோ்ந்த அழகுராஜை (42) போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவரிடமிருந்து 21 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, அந்தப் பகுதியில் மதுப்புட்டிகளை விற்ற நபரை போலீஸாா் பிடிக்க முயன்றபோது, அவா் அங்கிருந்து தப்பினாா். பின்னா், அவா் விட்டுச்சென்ற 15 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து, தப்பியோடியவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments