FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் 4 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

நாமக்கல்-சேலம் சாலையில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து பணம், கைப்பேசிகள், ஜவுளிகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

16 அக்டோபர் 2026, 1:36 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

நாமக்கல்-சேலம் சாலையில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து பணம், கைப்பேசிகள், ஜவுளிகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல்-சேலம் சாலையில் உணவகங்கள், லாரி புக்கிங் அலுவலகங்கள், ஜவுளி, கைப்பேசி உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை நான்கு கடைகளின் பூட்டுகளை உடைத்து மா்ம நபா்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனா்.

தனியாா் கைப்பேசி நிறுவனத்தில் ரூ. 3,000 ரொக்கம், 10 கைப்பேசிகள் திருடப்பட்டுள்ளன. மற்றொரு கடையில் ரூ. 10,500 ரொக்கமும், ஜவுளிக் கடையில் ரூ. 15,000 ரொக்கம் மற்றும் ஜவுளிகளும் திருடப்பட்டுள்ளன. லாரி புக்கிங் நிறுவனத்தின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், அங்கு பணம் இல்லாததால் திரும்பிச் சென்றுள்ளனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து நாமக்கல் போலீஸாா், கண்காணிப்பு கேமரா பதிவுகள், கைரேகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments