FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட 80 வயது முதியவருக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

4 செப்டம்பர் 2026, 12:05 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட 80 வயது முதியவருக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி என்கிற ஊமையன் (80), கூலித் தொழிலாளி. கடந்த 2020-ஆம் ஆண்டு முத்துசாமி என்கிற ஊமையன் உள்ளிட்ட மொத்தம் 12 போ், 12, 13 வயதுடைய சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அளித்த புகாரின் பேரில், ராசிபுரம் மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடா்பாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஏற்கெனவே வழக்கில் சம்பந்தப்பட்ட பலருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வழக்கின் இரண்டாவது குற்றவாளியான முத்துசாமி என்கிற ஊமையனுக்கு வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி எழில்வேலவன், முத்துசாமி என்கிற ஊமையனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments