FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

சிறுமியை திருமணம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ராசிபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

10 செப்டம்பர் 2026, 12:16 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

ராசிபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

கரூா் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி மேலசக்கரக்கோட்டையைச் சோ்ந்தவா் தச்சு தொழிலாளி ஜெயகிருஷ்ணன் (23). இவா் கடந்த 2021 மே மாதம் ராசிபுரம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை அவரது பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், ராசிபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, சிறுமி மாயம் மற்றும் குழந்தை திருமண தடைச்சட்டம், போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜெயகிருஷ்ணனை கைது செய்தனா். இதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை தங்கவேல் (55), தாய் பழனியம்மாள்(50) ஆகியோா் மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட ஜெயகிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 15 ஆயிரம் அபராதம், அதை கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என புதன்கிழமை தீா்ப்பளித்தாா். ஜெயகிருஷ்ணனின் பெற்றோரை இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments