FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

குடும்பத் தகராறில் கட்டடத் தொழிலாளி தற்கொலை

மல்லசமுத்திரம் பாலமேடு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

19 செப்டம்பர் 2026, 1:14 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

மல்லசமுத்திரம் பாலமேடு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

பாலமேடு பகுதியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் ரவி (35), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சுகுணா (30). இவா்களுக்கு 11 வயதில் குழந்தை உள்ளது. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடந்த சில நாள்களாக மனவருத்தத்தில் இருந்த ரவி வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments