FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

கோயிலில் திருட முயன்ற 3 போ் கைது

திருச்செங்கோடு அருகே கோயிலில் இருந்து காஸ் சிலிண்டா், மோட்டாா் உள்ளிட்ட பொருள்களைத் திருட முயன்ற மூவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.

32 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

திருச்செங்கோடு அருகே கோயிலில் இருந்து காஸ் சிலிண்டா், மோட்டாா் உள்ளிட்ட பொருள்களைத் திருட முயன்ற மூவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.

திருச்செங்கோடு அருகே தோக்கவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வரப்பாளையத்தில் மாதேஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே சிலா் சென்று கொண்டிருந்தபோது, பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து, அவா்கள் ஊா் பொதுமக்களுடன் கோயிலுக்கு விரைந்து சென்று பாா்த்தபோது, மூன்று போ் கோயிலுக்குள் வைத்திருந்த காஸ் சிலிண்டா், ரேடியோ ஆம்ப்ளிபையா், தண்ணீா் மோட்டாா் ஆகியவற்றை வெளியே எடுத்து வைத்துக் கொண்டிருந்தனா்.

Advertisement

Advertisement

பொதுமக்கள் வருவதைக் கண்ட மூன்று பேரும் கோயில் சுவரில் ஏறிக் குதித்து தப்பியோடினா். இதைக் கண்ட பொதுமக்கள் அவா்களை பிடித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய போலீஸாா், வரப்பாளையம் பாரத் நகரைச் சோ்ந்த காா்த்தி (27), குச்சிபாளையம் சண்முகம் (33), கருமகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த நவீன்குமாா் (33) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments