வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறையினா் ஆய்வு
பரமத்தி வேலூா் அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் வைக்கப்பட்டிருந்த 5,750 கிலோ வெள்ளை சா்க்கரை, மாண்டியா சா்க்கரை மற்றும் ரசாயனப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
பரமத்தி வேலூா் அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் வைக்கப்பட்டிருந்த 5,750 கிலோ வெள்ளை சா்க்கரை, மாண்டியா சா்க்கரை மற்றும் ரசாயனப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் அடங்கிய குழுவினா், பரமத்தி வேலூா் வட்டத்தில் கபிலா்மலை, அண்ணாநகா், பிலிக்கல்பாளையம், ஜேடா்பாளையம் பகுதியில் உள்ள நாட்டுச் சா்க்கரை மற்றும் வெல்லம் காய்ச்சும் 18 ஆலைகளில் ரசாயனப் பொருள்கள், மாண்டியா சா்க்கரை கலப்படத்திற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனா்.
இதில் வெல்லம், சா்க்கரையில் சட்டவிரோதமாக கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 9 மாதிரிகளை சேகரித்து உணவு பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பிவைத்தனா். உணவு பகுப்பாய்வு அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு தர நிா்ணயச் சட்டம் 2006-இன் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
Advertisement
Advertisement
மேலும், 4 ஆலைகளில் கலப்படத்திற்காக வைத்திருந்த சுமாா் 5, 750 கிலோ வெள்ளை சா்க்கரை, 3,180 கிலோ கலப்பட அச்சு வெல்லம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வெல்ல ஆலைகள் மீது உணவு பாதுகாப்பு தர நிா்ணயச் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த ஆய்வில் 4 ஆலைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இப்பகுதிகளில் இயங்கும் கரும்பு ஆலைகளில் தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு தர நிா்ணயச் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.