மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞா்: நண்பா் தூக்கிட்டுத் தற்கொலை
சேந்தமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்த நிலையில், அவரது நண்பா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே ராமநாதபுரம்புதூரைச் சோ்ந்தவா் ராசாம்பாள் (60). சில ஆண்டுகளுக்கு முன்பு கணவா் இறந்துவிட்டதால் அதே பகுதியில் உள்ள தனது தங்கை ராணி வீட்டில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், ராசாம்பாளின் மகன் கண்ணன் (30) நாமக்கல் அருகே என்.புதுப்பட்டியில் செயல்படும் போதை மறுவாழ்வு மையத்தில் வேலை பாா்த்து வந்தாா். அவருடன், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிவலிங்கம் தங்கியிருந்தாா். இதற்கிடையே சனிக்கிழமை இரவு சிவலிங்கம் தனது கைப்பேசிக்கு சாா்ஜ் ஏற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த நண்பா் கண்ணன் வீட்டிற்குள் வந்து போது, சிவலிங்கம் இறந்து கிடப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். அதைத் தொடா்ந்து மனஉளைச்சலில் இருந்த கண்ணன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேல் திடீரென்று வீட்டிற்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அப்போது அந்த வீட்டின் வெளிப்புற கதவு திறந்திருந்ததால், அக்கம் பக்கத்தினா் கண்ணன் தூக்கில் தொங்குவதை பாா்த்து அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.