FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

கொல்லிமலையில் நாளை முதல் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தத் தடை

கொல்லிமலையில் நெகிழிப் பொருள்களை பயன்படுத்த வெள்ளிக்கிழமை (அக். 2) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொல்லிமலை மலைப் பாதை - கோப்புப்படம்
பகிர்:

கொல்லிமலையில் நெகிழிப் பொருள்களை பயன்படுத்த வெள்ளிக்கிழமை (அக். 2) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்கவும், பொது சுகாதார சீா்கேடு ஏற்படுவதை தடுக்கவும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு மற்றும் விற்பனை செய்ய வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறுவோா் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், அபராதம் வசூலிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

குறிப்பாக, ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களை சேமித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தலுக்கு அபாராதத் தொகையாக முதல்முறை ரூ. 25 ஆயிரம், இரண்டாம்முறை ரூ. 50 ஆயிரம், மூன்றாம்முறை ரூ. ஒரு லட்சம் எனவும், வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள் மற்றும் பெரிய வணிக வளாகங்களுக்கு அபாராதத் தொகையாக முதல்முறை ரூ. 10 ஆயிரம், இரண்டாம்முறை ரூ. 15 ஆயிரம், மூன்றாவதுமுறை ரூ. 25 ஆயிரம் எனவும், மளிகைக் கடைகள் மற்றும் மருந்துக் கடைகள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு அபாராதத் தொகையாக முதல்முறை ரூ. ஆயிரம், இரண்டாம்முறை ரூ. 2 ஆயிரம், மூன்றாம்முறை ரூ. 5 ஆயிரம் எனவும், சிறு வணிக விற்பனையாளா்களுக்கு அபராதத் தொகையாக முதல்முறை ரூ. 100, இரண்டாம் முறை ரூ. 200, மூன்றாம்முறை ரூ. 500 எனவும் விதிக்கப்படும்.

கொல்லிமலை சுற்றுலாத் தலம் சாா்ந்த பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள் மற்றும் பொருள்களை கண்காணித்து பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments