FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விநாயகர் சதுர்த்தி விழா: பூஜை பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்!

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பூஜை பொருள்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் திரண்டனர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பூஜை பொருள்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் திரண்டனர்.
விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை (செப்.13) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது..  
இதையொட்டி வீதிதோறும் விநாயகர் சிலைகளை வைத்தும், வீடுகளில் சிறிய அளவிலான சிலைகளை வைத்தும் வழிபட பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.விநாயகர் சதுர்த்தி பூஜையில் வைத்து வழிபட தேவையான கொண்டைக் கடலை, தேங்காய், பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருள்கள் வாங்க ஏராளமானோர் கடை வீதிகளில் குவிந்தனர்.
சேலம் சின்னக்கடைவீதி, பெரியகடை வீதி, தேர்வீதி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. விநாயகர் சிலை விற்பனையும் சூடுபிடித்துள்ளது. 
சேலம் கடைவீதி, முதல் அக்ரஹாரம்,  2 -ஆவது அக்ரஹாரம், அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. 
அரை அடி முதல் 20 அடி உயரம் வரையிலான பல விதமான விநாயகர் சிலைகளை பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். சதுர்த்தியன்று வைத்து பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகளைஅனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் கரைக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி, செந்தாரப்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 52 சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தம்மம்பட்டி பகுதிகளில் மொத்தம் 45 விநாயகர் சிலைகள், செந்தாரப்பட்டியில் 7 விநாயகர் சிலைகள் வைத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  சிலை பாதுகாப்பு குழுவினர்  உரிய ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொரு சிலைக்கும் தலா ஒரு காவலர் வீதம்,  செப்.13-ஆம் தேதி முதல் பாதுகாப்பு வழங்கப்படும். பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை தம்மம்பட்டியில் வருகிற 16-ஆம் தேதியும், செந்தாரப்பட்டியில் 17-ஆம் தேதியும் விஜர்சன ஊர்வலம் நடத்தி கரைக்கப்படும்.
இதுகுறித்து தம்மம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் கூறியது, சிலைகளை கரைக்கப்படும் வரை தினமும் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments