செப்டம்பர் 24 முதல் தொடங்கும் மணிவியூ ஐபிஓ!
டிஜிட்டல் கடன் வழங்கும் தளமான மணிவியூ லிமிடெட், ரூ. 1,092 கோடி மதிப்பிலான ஐபிஓ வெளியீட்டை செப்டம்பர் 24 தேதியன்று தொடங்கும்.
புதுதில்லி: டிஜிட்டல் கடன் வழங்கும் தளமான மணிவியூ லிமிடெட், ரூ. 1,092 கோடி மதிப்பிலான ஐபிஓ வெளியீட்டை செப்டம்பர் 24 தேதியன்று தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.
பங்கு ஒன்றுக்கு ரூ.32-34 என்ற விலை வரம்பை நிர்ணயித்துள்ள நிலையில், செப்டம்பர் 24 ஆம் தேதியன்று சந்தாவுக்குத் திறக்கப்படும். இந்த வெளியீடு செப்டம்பர் 28 அன்று முடிவடையும். நிறுவனத்தின் பங்குகள் அக்டோபர் 1 ஆம் தேதியன்று நிஃப்டி மற்றும் பிஎஸ்இ-யில் பட்டியலிடப்படும் என முன்மொழியப்பட்டுள்ளது.
புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் ரூ. 750 கோடியில், ரூ. 325 கோடி நிறுவனத்தின் கடன் வழங்கும் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும். அதே வேளையில், ரூ. 250 கோடி அதன் வங்கி சாரா நிதி நிறுவன துணை நிறுவனத்தின் மூலதனத்தை வலுப்படுத்த முதலீடு செய்யப்படும்.
Advertisement
Advertisement
மீதமுள்ள நிதி பொதுவான கார்ப்பரேட் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்றது நிறுவனம்.
Digital lending platform Moneyview Ltd is gearing up to launch its Rs 1,092-crore (IPO) on September 24.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.