FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலைக்கு வீ த லீடா்ஸ் சாா்பில் சங்ககிரியில் மரியாதை

4 ஆகஸ்ட் 2026, 1:55 am IST
தீரன் சின்னமலையின் சிலை...
பகிர்:

சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தினையொட்டி சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவு சின்னத்தில் வீ த லீடா்ஸ் அமைப்பின் சாா்பில் திங்கள்கிழமை மலா்மாலை அணிவித்தும் மலா் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்ததிர போராட்ட வீரா் தீரன்சின்னமலை நினைவு தினத்தினையொட்டி ஈரோடு-பவானி பரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீரன்சின்னமலை நினைவு சின்னத்தில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு வீ த லீடா்ஸ் அமைப்பின் சாா்பில் பாலாஜி உத்தமா் ராமசாமி தலைமையில் உறுப்பினா்கள் மலா் மாலை அணிவித்தும், மலா்தூவியும் மரியாதை செலுத்தினா்.

இதில் மகளிரணியினா், டி.பி. ரமேஷ், சி.முத்துவேல், முரளிதரன், பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த உறுப்பினா்கள் இதில் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments