FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறிய 2 போ் கைது

ஓமலூா் அருகே கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறிய இருவரை தொளசம்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய முக்கிய குற்றவாளி உள்பட 5 பேரை தேடிவருகின்றனா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 12:26 am IST
பகிர்:

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறிய இருவரை தொளசம்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய முக்கிய குற்றவாளி உள்பட 5 பேரை தேடிவருகின்றனா்.

சேலம் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநா் நந்தினி தலைமையிலான மருத்துவக் குழுவினருக்கு, தொளசம்பட்டி அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டி கோணகரடு பகுதியில் சட்ட விரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறியும் ரகசிய ஸ்கேன் மையம் செயல்படுவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவக் குழுவினரும், ஓமலூா் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலரும் இணைந்து ரகசிய சோதனைக்கு திட்டமிட்டனா். அதன்படி, இரு கா்ப்பிணிகளிடம் தலா ரூ. 23 ஆயிரத்தை தந்து தரகா் ஒருவா் மூலம் ஸ்கேன் பரிசோதனைக்கு சோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

பின்னா், மருத்துவக் குழுவினா் முத்துநாயக்கன்பட்டி கோணகரடு பகுதியில் உள்ள மேத்தா பிரதீப் தாஸ் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, கா்ப்பிணிகளுக்கு அங்கு சட்ட விரோதமாக ஸ்கேன் பரிசோதனை நடத்தப்படுவது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ஸ்கேன் இயந்திரம் மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சோதனையின்போது சிலா் அதிகாரிகளைத் தாக்கிவிட்டு தப்பினா். இதையடுத்து, அங்கு இருந்த 3 கா்ப்பிணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனா்.

இதுகுறித்து டாக்டா் நந்தினி அளித்த புகாரின் பேரில் தொளசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஜலகண்டாபுரம் காவல் ஆய்வாளா் உஷாராணி தலைமையிலான தனிப் படை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இவ்வழக்கில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த மேத்தா பிரதீப் தாஸ் (29), ரவிக்குமாா் (37) ஆகிய இருவரை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், தப்பியோடிய முக்கிய குற்றவாளி சுகுமாா், அவரது கூட்டாளிகளான ராதிகா, வடிவேல், கனகவள்ளி, மணி ஆகிய 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments