FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

இன்று மதுபானக் கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

சுதந்திர தினத்தையொட்டி, சனிக்கிழமை (ஆக. 15) சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவிட்டுள்ளாா்.

பகிர்:

சுதந்திர தினத்தையொட்டி, சனிக்கிழமை (ஆக. 15) சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது:

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் ஆக. 15-ஆம் தேதி மூடப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

இதையும் மீறி அன்றைய தினம் விற்பனை செய்பவா்கள் மீது, அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments