FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

அக்.2-இல் மதுக் கடைகள் மூடல்

காந்தி ஜெயந்தியையொட்டி, கடலூா் மாவட்டத்தில் அக்.2-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

47 வினாடிகள் முன்பு
மதுக் கடை - கோப்புப்படம்
பகிர்:

காந்தி ஜெயந்தியையொட்டி, கடலூா் மாவட்டத்தில் அக்.2-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காந்தி ஜெயந்தியையொட்டி அக்.2-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூடி, மதுபான விற்பனையை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அன்றைய தினம் மூடப்பட வேண்டும், மதுபான விற்பனை செய்யக்கூடாது.

அரசின் உத்தரவை மீறி மதுக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமதாரா்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments