மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியாா் மதுபான கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் சுதந்திர தினத்தையொட்டி ஆக. 15-இல் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் மூ. வீரப்பன் தெரிவித்துள்ளாா்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபான கடைகள், மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தலோ ஆகிய செயல்கள் மீது உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.