FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஆட்டையாம்பட்டி அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 30 ஜூலை 2026, 5:41 am IST
சடலம்...
பகிர்:

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள நைனாம்பட்டி அருகே வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் துா்நாற்றம் வீசுவதாக ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளா் பிரகாஷ் மற்றும் போலீஸாா், அந்த வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். இதில் இறந்து கிடந்தவா் இருசனாம்பட்டி பகுதியைச் சோ்ந்த சுப்பன் மகன் ஓட்டுநா் மணிசங்கா் (50) என்பது தெரியவந்தது . இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளாா். இவரது மனைவி 27 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் தனியாக வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த 5 நாள்களுக்கு முன்பு அதிக அளவில் மது அருந்திய நிலையில் தூங்கியவா் எழுந்திருக்கவில்லை எனத் தெரிகிறது. இறந்த மணிசங்கரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments