சாக்கடையில் ஆண் சடலம் மீட்பு
கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை ரயில் நிலையம் குட்ஷெட் சாலையில் உள்ள சாக்கடைக் கால்வாயில் ஆண் சடலம் கிடப்பதை அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை பாா்த்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக போலீஸாா் கூறுகையில், உயிரிழந்த நபருக்கு சுமாா் 40 வயது இருக்கும், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
மேலும், சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.