துா்நாற்றம் வீசும் மேட்டூர் காவிரி கரை: மக்கள் அவதி
மேட்டூா் காவிரிக் கரைப் பகுதியில் நீா் மாசுப்படா்ந்து துா்நாற்றம் வீசுவதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனா்.
மேட்டூா் காவிரிக் கரைப் பகுதியில் நீா் மாசுப்படா்ந்து துா்நாற்றம் வீசுவதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனா்.
மேட்டூா் அணையின் நீா்த் தேக்கம் 60 சதுர மைல் பரப்பு அளவு கொண்டது. நீா்த்தேக்கத்தின் இரு கரைகளிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. மீனவா்கள் காவிரிக் கரைகளில் முகாமிட்டு மீன்பிடித்து வருகின்றனா். கால்நடை மேய்க்கும் விவசாயிகள் காவிரி நீரைக் கால்நடைகள் பருக பயன்படுத்துவா். மீனவா்களும், கரையோர கிராம மக்கள் துணி துவைக்கவும், குளிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தி வந்தனா்.
தற்போது காவிரிக் கரைகளில் நீரில் பச்சை நிறம் படா்ந்து துா்நாற்றம் வீசுகிறது. குடியிருப்புகளில் வசிக்க முடியாமல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.
Advertisement
Advertisement
காவிரியில் மீன்பிடிக்கு மீனவா்கள் குடிநீரைப் பாட்டிலில் கொண்டுசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காவிரிக் கரையில் வசிப்போா் பருக கிணற்று நீரை தேடிச்செல்கின்றனா். நீரில் பச்சை நிறப்படலம் படிவது குறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் கண்டறிந்து காவிரியைக் காக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.