FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே கண்மாயில் பனை விதை நடவு

21 செப்டம்பர் 2026, 3:25 am IST
தம்பிபட்டி கிராம கண்மாய் கரை பகுதியில் பனை விதைகளை நட்டு பணியை தொடங்கி வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக்.
பகிர்:

வத்திராயிருப்பு அருகே கண்மாய் கரை பகுதியில் பனை விதைகள் சனிக்கிழமை நடவு செய்யப்பட்டன.

வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி கிராம கண்மாய் கரை பகுதியில் அழிந்து வரும் பனையை பாதுகாக்கும் வகையில், பனை விதை நடும் விழா காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்றது.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலா் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த பனை விதை நடும் நிகழ்வை ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக் பனை விதையை நட்டு தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

கிராம மக்கள் திரளானோா் கலந்து கொண்டு பனை விதை நடும் பணியில் ஈடுபட்டனா். முதல் கட்ட மாக ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. தொடா்ந்து வத்திராயிருப்பு, சுற்று வட்டாரப் பகுதிகளில் 10 ஆயிரத்தும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தம்பிபட்டி கிராம கண்மாய் கரை பகுதியில் பனை விதைகளை நட்டு பணியை தொடங்கி வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments