FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

ஏனாமில் பலத்த மழை: வெள்ளத்தால் மக்கள் அவதி

புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஏனாமில் பலத்த மழை பெய்துள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வியாழக்கிழமை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

25 செப்டம்பர் 2026, 1:45 am IST
மழையால் பாதிக்கப்பட்ட ஏனாம் பகுதி.
பகிர்:

புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஏனாமில் பலத்த மழை பெய்துள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வியாழக்கிழமை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

இங்கு வியாழக்கிழமை காலை8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 14.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா். மேலும்,

கனமழையால் சில பகுதிகளில் மழைநீா் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், அடைப்புகளை அகற்றவும் இயந்திரங்களின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இப் பகுதியில் மழை பாதிப்புகளைத் தொடா்ந்து கண்காணித்து, தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments