வீரகனூா் அருகே இளம்பெண் தற்கொலை
சொக்கனூரில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வீரகனூா் அருகே சொக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன். செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சினேகா. இவா்களுக்கு குகன், ரூபன் என மகன்கள் உள்ளனா்.
சினேகாவுக்கு புற்றுநோய் இருந்ததால், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இதனால், மனமுடைந்த சினேகா வீட்டில் தனியாக இருந்தபோது, ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுக் கொண்டாா்.
Advertisement
Advertisement
சினேகாவை மீட்ட முருகேசன் கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சினேகா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.