அரூா் அருகே சிறுமி தற்கொலை
அரூா் அருகே சிறுமி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அரூா் அருகே சிறுமி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தீா்த்தகிரி மகள் சிவரஞ்சனி (15), எட்டாம் வகுப்புவரை படித்துள்ளாா். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்த நிலையில், வீட்டு வேலைகள் செய்வது தொடா்பாக சிறுமியை அவரது பெற்றோா் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சிவரஞ்சனி, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.