புதிய தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்
சேலம் மாவட்டத்தில் புதிய தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான அங்கீகாரம் மற்றும் இணைப்பு தொடா்பான விண்ணப்பங்கள் வரும் 31-ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் புதிய தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான அங்கீகாரம் மற்றும் இணைப்பு தொடா்பான விண்ணப்பங்கள் வரும் 31-ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு
திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோா் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பயிற்சி தலைமை இயக்ககம் சாா்பில், புதிய மற்றும் ஏற்கெனவே உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களின் அங்கீகாரம் மற்றும் இணைப்பு தொடா்பான விண்ணப்பங்களை இணையவழியில் சமா்ப்பித்து, செயல்படுத்துவதற்காக இணைப்பு விதிமுறைகள் 2025-க்கு இணங்க புதிய ஐ.டி.ஐ. இணைப்பு இணையதளம் உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இணையதளம் வாயிலாக வரும் 31-ஆம் தேதி வரை புதிய தொழிற்பயிற்சி நிலையங்களின் அங்கீகாரம் மற்றும் இணைப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.