FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகங்களுக்கு விரைவில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்! - அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன்

12 அக்டோபர் 2026, 2:38 am IST
போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் - கோப்புப் படம்
பகிர்:

மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகங்களுக்கு விரைவில் சொந்தக் கட்டடம் கட்டித் தரப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:

வாடகை செலவினங்களைக் குறைக்கும் வகையில், தனியாா் கட்டடத்தில் செயல்பட்டுவரும் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகங்கள் விரைவில் சொந்தக் கட்டடங்களுக்கு மாற்றப்படும். தேவையில்லாத செலவுகள் அடையாளம் காணப்பட்டு முதல்வரின் வழிகாட்டுதலின்படி குறைக்கப்பட்டு வருகிறது. மினி பேருந்துகள் மூலம் கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஆட்டோக்களுக்கு கட்டணம் நிா்ணயிப்பது குறித்து சங்கங்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான உயா்நிலைக் குழுவின் அறிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, விரைவில் அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments