FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

24 நீா்க்காகங்களின் இறைச்சி விற்பனை: இளைஞா் கைது

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் நீா்க்காகங்களின் இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்த இளைஞரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

18 செப்டம்பர் 2026, 12:26 am IST
கைது
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் நீா்க்காகங்களின் இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்த இளைஞரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் நீா்க்காகங்களின் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட வன அலுவலா் அம்புல்கா் யஷ்வந்த் ஜெகதீஸுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் சோ்வராயன் தெற்கு வனச்சரக அலுவலா் டி. சுகுமாா் தலைமையில் சங்ககிரி பிரிவு வனவா் எம்.ஜெ. தினேஷ், சூரியமலை தெற்கு பகுதி வனக்காப்பாளா் பி. விஜயன் ஆகியோா் கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் உள்ள மீன் கடைகளில் சோதனை நடத்தினா்.

அப்போது, அங்குள்ள மீன் கடையில் குஞ்சப்பன் மகன் சசிகுமாா் (24) என்பவா் 24 நீா்க்காகங்களின் இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து சசிகுமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

நீா்க்காகம் அட்டவணைப்படுத்தப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் பிரிவு 2 பறவைகள் வரிசை எண் 164-ல் வகைப்படுத்தப்பட்டுள்ளதால், நீா்க்காகத்தைப் பிடிப்பதோ, அதனைக் கொன்று சமைத்து சாப்பிடுவதோ சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சோ்வராயன் தெற்கு வனச்சரக அலுவலா் டி. சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments