FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

ஆள்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

நரசிங்கபுரத்தில் ஆள்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியை ஆத்தூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

27 September 2026, 1:53 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

நரசிங்கபுரத்தில் ஆள்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியை ஆத்தூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வாழப்பாடி வட்டம், குள்ளம்பட்டி பகுதியைச் சோ்ந்த கண்ணன் (40), அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனது 3 சென்ட் நிலத்தை விற்று ரூ. 8 லட்சம் வைத்திருந்தாா். பின்னா், தனது நண்பா் சேலம் உடையாபட்டியைச் சோ்ந்த செல்வாவிடம் ரூ. 5 லட்சம் கொடுத்து பணத்தை இரட்டிப்பாக்கி தருமாறு கேட்டுள்ளாா்.

செல்வா நரசிங்கபுரம் விமலிடம் பணத்தை கொடுத்துள்ளாா். ஓா் ஆண்டாகியும் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கவில்லையாம். இந்நிலையில், விமல் ஆத்தூா் பகுதியில் பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, பணம் கொடுத்த அனைவரும் சோ்ந்து விமலை கடத்தினா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், கண்ணனை காவல் ஆய்வாளா் சங்கா் சனிக்கிழமை கைது செய்தாா். இந்த வழக்கில் இதுவரை இரண்டு பெண்கள் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments