FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

"ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க நடவடிக்கை'

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார் ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்தார்  
பழனி சார் ஆட்சியர் அலுவலகத்தில், ஊட்டச்சத்து குறைவுள்ள குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட "போஷன் அபியான்' என்ற திட்டத்தை செயல்படுத்துவது குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து சார் ஆட்சியர் அருண்ராஜ் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குள்ளத் தன்மையாக 31சதவிகிதமும், உயரத்திற்கேற்ப எடை இல்லாத குறைபாட்டில் 26.5 சதவிகிதமும், ரத்தசோகையால் 43.7 சதவிகித குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  ஆகவே, முதற்கட்டமாக பிறந்த குழந்தை முதல் 6 வயது குழந்தைகள் வரையுள்ள குள்ளத்தன்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினை ஆண்டுக்கு 2 சதவிகிதம் குறைக்க வேண்டும். அதே போல்  6 மாதம் முதல் 59 மாதங்கள் வரையிலான குழந்தைகளிடம் காணப்படும் ரத்த சோகையை ஆண்டுக்கு 3 சதவிகிதம் குறைக்க வேண்டும். இதேபோல 15 வயது முதல் 49 வயது வரையுள்ள வளர் இளம்பெண்கள் மற்றும் பெண்களிடையே காணப்படும் ரத்தசோகையை ஆண்டுக்கு 3 சதவிகிதம் என மூன்று ஆண்டுகளுக்கு 9 சதவிகிதம் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த இலக்கினை வாழ்க்கை சுழற்சி மூலமாக ஒன்றிணைந்து அடையவும், இதன் முக்கிய இலக்கு தற்போது 38.4 சதவிகிதம் உள்ள குள்ளத்தன்மையை 2022 ஆம் ஆண்டிற்குள் 25 சதவிகிதமாக குறைக்க சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்றார்.
 இந்த கூட்டத்தில்  உணவுக்கட்டுப்பாட்டுத்துறை, சுகாதாரத் துறை, கல்வித்துறை, நகராட்சி,ஊராட்சித்துறை அதிகாரிகள், சத்துணவு மேலாண்மை அதிகாரிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments