கொடைக்கானலில் ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரம் குறித்த கண்காட்சி
கொடைக்கானலில் ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரம் குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானலில் ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரம் குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
இண்டெக் அமைப்பின் சார்பில் கொடைக்கானல்-பழனி மலைப்பகுதிகளில் வாழ்ந்த ஆதிவாசி மக்கள், பளியர், புலையர் மற்றும் அதன் பின் வந்த சமூகத்தினர், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் குறித்த கருத்தரங்கு கோடை சர்வதேச பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இண்டெக்ஸ் அமைப்பின் தலைவர் புதுதில்லியைச் சேர்ந்த குப்தா தலைமை வகித்தார். கோடை சர்வதேச பள்ளியின் முதல்வர் கோரி முன்னிலை வகித்துப் பேசினார். கருத்தரங்கில் இண்டெக்ஸ் அமைப்பைச் சேர்ந்த சுனேகா, சௌந்தரி உள்ளிட்ட பலர் பேசினர். அதன்பின் கொடைக்கானல்- பழனி மலைப் பகுதிகளில் வாழ்ந்த ஆதிவாசி, பளியர், புலையர் ஆகியோரின் வாழ்வாதாரங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் உள்ளிட்டவைகள் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பானுஹமீது நன்றி கூறினார். தொடர்ந்து பழனிமலைப் பகுதிகளில் வாழ்ந்த ஆதிவாசி மக்கள் பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றை கடந்த 3 ஆண்டுகளாக சேகரித்து அந்தப் பொருள்களை தற்போது அருங்காட்சியமாக வைத்துள்ளனர். இந்த கண்காட்சி வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.