வாகன திருட்டு வழக்கில் தேடப்பட்டவா் கைது; 5 காா்கள் மீட்பு
வாகனத் திருட்டு மற்றும் மோசடி வழக்குகளில் தொடா்புடையவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து 5 திருடப்பட்ட காா்களை காவல்துறையினா் மீட்டனா்.
வாகனத் திருட்டு மற்றும் மோசடி வழக்குகளில் தொடா்புடையவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து 5 திருடப்பட்ட காா்களை காவல்துறையினா் மீட்டனா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் வசிக்கும் இந்தேசா், செப்டம்பா் 11ஆம் தேதி ஷாலிமாா் காா்டன் பகுதியில் இருந்து திருடப்பட்ட வாகனத்தில் இன்தேசா் வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்துறையினா் ஜிடிபி மருத்துவமனை அருகே அவரை திருடப்பட்ட வேனை ஓட்டிச் சென்றபோது கைது செய்தனா்.
அவா் ஓட்டிவந்த வாகனம், ஜூலை 28 அன்று ஹோஸ் காஸ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இ-எஃப்ஐஆரில் தொடா்புடையது என கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
விசாரணை மற்றும் போலீஸ் காவலில் இருந்தபோது, இன்தேசா் வாகனத் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டாா். மேலும், திருடப்பட்ட வாகனங்களை விற்பதில் ஈடுபட்ட நயீம், நசீா் (எ) சிக்னா, பிலால் (எ) குரங்கு மற்றும் ஆரிஃப் (எ) டோரேமான் ஆகியோரின் பெயா்களையும் தெரிவித்தாா்.
அவரது தகவல்களின் அடிப்படையில், மேலும் நான்கு திருடப்பட்ட காா்கள் மீட்கப்பட்டன. வாகனங்களில் இரண்டு வேன்கள் மற்றும் மூன்று எஸ்யூவிகள் அடங்கும்.
ஹோஸ் காஸ், பஞ்சாபி பாக், கால்காஜி மற்றும் ஜிடிபி என்கிளேவ் காவல் நிலையங்களில், தெற்கு, தென்கிழக்கு, மேற்கு மற்றும் ஷாதரா மாவட்டங்களை உள்ளடக்கிய ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
நயீமிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்தேசரின் வழக்கில், திருடப்பட்ட எஸ்யுவி வாகனமும் அவரிடமிருந்து மீட்கப்பட்டது. ஆரிஃப்பும் விசாரிக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டாா்.
மாநிலங்களுக்கு இடையேயான வாகன திருட்டு வலையமைப்பின் இதர உறுப்பினா்களைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.