FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சிசிடிவி பதிவு கருவி திருட்டு- 3 போ் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் பொதுப் பணித் துறையால் நிறுவப்பட்டிருந்த சிசிடிவி எண்ம விடியோ பதிவு கருவியை (டிவிஆா்) திருடியதாக, பழைய இரும்பு வியாபாரி ஒருவா் உள்பட மூன்று பேரை தில்லி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:03 am IST
கோப்புப் படம்
பகிர்:

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் பொதுப் பணித் துறையால் நிறுவப்பட்டிருந்த சிசிடிவி எண்ம விடியோ பதிவு கருவியை (டிவிஆா்) திருடியதாக, பழைய இரும்பு வியாபாரி ஒருவா் உள்பட மூன்று பேரை தில்லி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருடப்பட்ட அந்தப் பொருளை விற்ன் மூலம் கிடைத்த பணம் மற்றும் அதிலிருந்த ஹாா்ட் டிஸ்க் ஆகியவற்றையும் காவல்துறையினா் மீட்டனா்.

இந்தத் திருட்டுச் சம்பவம் ஜூலை 27 அன்று சீலம்பூரின் ஜெ-பிளாக்கில் நிகழ்ந்தது. அதைத் தொடா்ந்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இதுகுறித்து ’இ-எஃப்ஐஆா்’ பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

விசாரணையின் போது சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, கஜூரி காஸ் பகுதியைச் சோ்ந்த டேனிஷ் அன்சாரி (30) மற்றும் ஆரிஃப் கான் (27) ஆகிய இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

ஆரிஃப் முன்பு பொதுப் பணித் துறையில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததும், டிவிஆா் மற்றும் ஹாா்ட் டிஸ்க் ஆகியவற்றை எவ்வாறு கழற்றுவது என்பது குறித்த தொழில்நுட்ப அறிவு அவருக்கு இருந்ததும் தெரியவந்தது. இந்த அனுபவமே அவா் இத்திருட்டைச் செய்ய உதவியதாகக் கூறப்படுகிறது.

விசாரணையின்போது, திருடப்பட்ட டிவிஆா் கருவி ஜஹாங்கீா்புரியில் உள்ள ஒரு பழைய இரும்பு வியாபாரியிடம் விற்ாகக் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஒப்புக்கொண்டனா்.

அந்தத் தகவலின் அடிப்படையில், திருடப்பட்ட பொருளை வாங்கியதாகக் கூறப்படும் ஆசு (18) என்பவரையும் காவல்துறையினா் அதே நாளில் கைது செய்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடமிருந்து திருடப்பட்ட ஹாா்ட் டிஸ்க் மற்றும் டிவிஆா்-ஐ விற்ன் மூலம்

கிடைத்ததாகக் கருதப்படும் ரூ. 48,000 ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments