தமிழக அமைச்சர்கள் பலர் விரைவில் அமமுகவுக்கு வருவார்கள்
தமிழக அமைச்சரவையிலிருந்து 10 அமைச்சர்கள் தவிர மற்றவர்கள் விரைவில் அமமுகவுக்கு வருவார்கள் என அக்கட்சியின்
தமிழக அமைச்சரவையிலிருந்து 10 அமைச்சர்கள் தவிர மற்றவர்கள் விரைவில் அமமுகவுக்கு வருவார்கள் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
கொடைக்கானல் லாஸ்காட் சாலை, அண்ணாநகர் ஆகியப் பகுதிகளில் நகர அமமுக சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கொடியேற்று விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரிடேயே சுமூக உறவு இல்லை. தினமும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் அமமுக நிச்சயம் வெற்றி பெறும். குட்கா ஊழல் வழக்கில் தவறு செய்த அமைச்சர் பதவி விலக வேண்டும். தன்மீது குற்றமில்லை என நிரூபணம் செய்த பின் அவர் மீண்டும் பதவியேற்கட்டும். தமிழக அமைச்சரவையிலிருந்து 10 அமைச்சர்கள் தவிர மற்றவர்கள் விரைவில் அமமுகவுக்கு வருவார்கள். அதே போல், 18 சட்டப் பேரவை உறுப்பினர்கள் குறித்து விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
இந்த தீர்ப்பு வந்ததும் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும். அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்போம். தற்போது ஒரு கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். இன்னும் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
தொடர்ந்து கொடைக்கானல் அருகே பள்ளங்கி பகுதியிலுள்ள தனியார் நிகழ்ச்சியிலும் தங்கத் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலர் நல்லுச்சாமி, நகரச் செயலர் கோவிந்தன், ஒன்றியச் செயலர் பொன்னுத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.