FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழ் மொழியுடன் அயல்மொழி  சொற்கள் கலப்பதை தடுக்க வேண்டும்: துணைவேந்தர் சு.நடராஜன்

அயல்மொழி சொற்கள் கலந்து, தமிழ் மொழி தன் அடையாளத்தை இழப்பதற்கு தமிழ் சமூகம் அனுமதிக்கக் கூடாது என

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

அயல்மொழி சொற்கள் கலந்து, தமிழ் மொழி தன் அடையாளத்தை இழப்பதற்கு தமிழ் சமூகம் அனுமதிக்கக் கூடாது என காந்திகிராம கிராமியப் பல்கலை. துணைவேந்தர் சு.நடராஜன் தெரிவித்தார்.
 இப்பல்கலைக் கழக தமிழ்த்துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற பாரதியார் நினைவு தின நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது: குழந்தைகளிடம் சிந்தனைத் திறன் வளர தொடக்கக் கல்வித் திட்டத்தைத் தாய்மொழி வழியாகக் கற்பிக்க கொள்கை அளவிலான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
 இன்றைய தமிழ் சமூகம் தாய்மொழியான தமிழில் பிழையின்றி, கூச்சமின்றிப் பேசவும், எழுதவும் தயக்கம் காட்டும் நிலை உள்ளது. ஆனால், ஆங்கிலத்தில் பேசுவதை கௌரவமாக கருதுகிறது.
  பேச்சு ஆங்கிலத்திற்கு (ஸ்போக்கன் இங்கிலிஷ்) பயிற்சி வகுப்புகள் இருப்பதைப் போல், விரைவில் பேச்சுத் தமிழுக்கான வகுப்புகள் தொடங்கும் நிலை வரலாம். எனவே, தமிழ் படித்தவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, வேதங்கள் கூறும் தத்துவங்கள் ஆகியவற்றை இன்றைய மக்கள் மறந்துவிட்டனர். தாய்மொழியில் வாசிப்பதற்கே சிரமம் அடைகின்றனர். 
 தாய் நாட்டுக்கு இணையாக தாய்மொழியையும் நேசித்தவர்  பாரதியார். எளிமையும், இனிமையும் கலந்த பாரதியாரின் கவிதைகளை வாசிக்கும் இளைய தலைமுறையினர், அதனை வாழ்வில் பின்பற்ற வேண்டும். பல தலைவர்களிடம் தொடர்பு கொண்டிருந்த பாரதியார், தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். 
தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மூலப் பொருள்கள், பல்வேறு பெயர்களுடன் வெளிநாடுகளிலிருந்து நம்முடைய சந்தைகளில் விற்பனைக்கு வருகின்றன. அதுபோலவே, நம்முடைய மொழியும், பல அயல் மொழி சொற்களால் அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறது. எனவே நம்முடைய இயற்கை வளத்தை பாதுகாப்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை, தமிழ் மொழிக்கும் அளிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், கோடைப் பண்பலை வானொலி நிலைய  இயக்குநர் பழ.அதியமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
தமிழ்த்துறைத் தலைவர் பா.ஆனந்தகுமார், பேராசிரியர் வ.ராசரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments