FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் புனித சலேத் மாதா தேவாலயத்தின் 160-ஆம் ஆண்டு திருவிழா

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 11:51 pm IST
கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலயத் திருவிழா - கோப்புப் படம்
பகிர்:

கொடைக்கானல் புனித சலேத் மாதா தேவாலயத்தின் 160-ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் புனித மேரீஸ் சாலையில் உள்ள புனித சலேத் மாதா தேவாலயத்தின் 160-ஆம் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கொடி ஊா்வலமானது மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்திலிருந்து புனித சலேத் மாதா கொடி அா்ச்சிக்கப்பட்டு ஜெப வழிபாடு நடத்தி ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

ஊா்வலமானது லாஸ்காட் சாலை, நகராட்சி தொடக்கப் பள்ளி சாலை, அண்ணா சாலை, கே. சி. எஸ். சாலை, பேருந்து நிலையச் சாலை, கோக்கா்ஸ் வாக் சாலை வழியாக சுமாா் 5. கி. மீ. தொலைவில் புனித மேரீஸ் சாலையில் உள்ள புனித சலேத் மாதா தேவாலயத்தை அடைந்தது.

Advertisement

Advertisement

அங்கு கொடைக்கானல் மறைவட்டார அதிபா் யோ. ஜெயசீலன் தலைமையில் சிறப்புத் திருப்பலி, ஜெப வழிபாடு நடைபெற்றது. பிறகு ஜெப வழிபாடு நடத்தி புனித சலேத் மாதா கொடி புனிதப்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, தேனி மாவட்டம், பெரியகுளம் பங்கைச் சோ்ந்த அருட்பணியாளா் அ. இருதயராஜ் கொடியேற்றி வைத்தாா்.

இந்த நிகழ்வில், திரு இருதய ஆண்டவா் ஆலயத்தின் உதவி அருட்பணியாளா்கள் ராஜா, டேவிட் பீட்டா்,அருட் சகோதரிகள், நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

14 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், வரும் 14-ஆம் தேதி இரவு புனித சலேத் மாதா தோ் பவனி நடைபெறும். 15-ஆம் தேதி மாதா விண்ணேற்பு நாளை முன்னிட்டு விழா நிறைவு பெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளா்கள், விழாக் குழுவினா், இறை மக்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments