FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

விதிமுறைகளை மீறிய உரக் கடைகள் 21 நாள்கள் விற்பனை செய்யத் தடை

விதிமுறைகளை பின்பற்றாமல் குஜிலியம்பாறை பகுதியில் செயல்பட்ட 2 உரக் கடைகளுக்கு 21 நாள்கள் உரங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:06 am IST
கோவிலூா் பகுதியிலுள்ள உரக் கடையில் புதன்கிழமை ஆய்வு செய்த வேளாண்மை அலுவலா்கள்.
பகிர்:

விதிமுறைகளை பின்பற்றாமல் குஜிலியம்பாறை பகுதியில் செயல்பட்ட 2 உரக் கடைகளுக்கு 21 நாள்கள் உரங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பாளையம், குஜிலியம்பாறை, கோவிலூா் பகுதியிலுள்ள உர விற்பனைக் கடைகளில் வேளாண்மைத் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி, பராமரிக்கப்பட வேண்டிய இருப்பு பதிவேடு, விலைப் பட்டியல் பலகை, யூரியா விற்பனைப் பதிவேடு, பிஓஎஸ் விற்பனை முனையக் கருவி ஆகியவற்றை முறையாகப் பின்பற்றவது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் 2 உரக் கடைகள் விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்டது. இந்த உரக் கடைகள் 21 நாள்கள் உர விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

Advertisement

Advertisement

மாவட்டத்திலுள்ள அனைத்து உரக் கடைகளும், உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி, இருப்பு விவரங்கள் முதல் விற்பனை முனையக் கருவி வரை அனைத்து நடைமுறைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments