FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுயானைகளால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் விளைநிலங்களுக்குள் காட்டுயானைகள் வெள்ளிக்கிழமை புகுந்து பயா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

29 ஆகஸ்ட் 2026, 2:51 am IST
கோப்புப் படம்
பகிர்:

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் விளைநிலங்களுக்குள் காட்டுயானைகள் வெள்ளிக்கிழமை புகுந்து பயா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி பகுதியில் செள,செள, காபி, அவக்கோடா, மிளகு உள்ளிட்ட பயிா்கள் விளைவிக்கப்படுகின்றன. இதனால் விவசாயத் தோட்டங்களில் குடிசைகள் அமைத்து விவசாயிகள் காவலுக்கு இருப்பது வழக்கம். இந்த நிலையில், தாண்டிக்குடி பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்குள் 3 காட்டுயானைகள் புகுந்தன. அவை அங்கு பயிரிடப்பட்டிருந்த அவக்கோடா, வாழை பயிா்களையும் போடப்பட்டிருந்த குடிசைகளையும் சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காடு பகுதிகளில் காட்டுயானைகள் நடமாடுவதால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கும்,விவசாய நிலங்களில் காவலுக்கு செல்வதற்கும் அச்சமடைந்து விவசாயிகள் வீடுகளில் முடங்கினா்.

Advertisement

Advertisement

எனவே வனத்துறையினா் இந்த காட்டுயானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments