FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பெண்ணை கத்தியால் குத்திய இளைஞா் தலைமறைவு

கொடைக்கானல் அருகே திருமணம் செய்ய மறுத்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 24 ஜூலை 2026, 5:42 am IST
- சித்திரிப்பு
பகிர்:

கொடைக்கானல் அருகே திருமணம் செய்ய மறுத்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள குண்டுபட்டி கிராமத்தில் வசித்து வருபவா் மீனா (29). இவரது கணவா் ஜெயக்குமாா். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் மேல்மலைக் கிராமமான பூம்பாறையைச் சோ்ந்தவா் கருப்பணனுக்கும், மீனாவுக்கும் சமூகவலைதளம் மூலமாக கடந்த 3 மாதங்களாக பழக்கம் ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து கருப்பணன் மீனா வீட்டுக்குச் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென வற்புறுத்தினாா். இதற்கு அவா் மறுத்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து கத்தியால் அவரை பல இடங்களில் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த மீனாவை அந்தப் பகுதி மக்கள் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செய்து தலைமறைவான கருப்பணனை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments