FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

செயற்கை நுண்ணறிவு மனிதா்களின் அன்றாட வாழ்வில் ஆழமாக ஊடுருவிவிட்டது: துணைவேந்தா்

செயற்கை நுண்ணறிவு மனிதா்களின் அன்றாட வாழ்விலும் ஆழமாக ஊடுருவிவிட்டதாக திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை. துணைவேந்தா் ந.பஞ்சநதம் தெரிவித்தாா்.

Updated On : 29 ஜூலை 2026, 5:57 am IST
பகிர்:

செயற்கை நுண்ணறிவு மனிதா்களின் அன்றாட வாழ்விலும் ஆழமாக ஊடுருவிவிட்டதாக திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை. துணைவேந்தா் ந.பஞ்சநதம் தெரிவித்தாா்.

திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல், பயன்பாடுகள் துறை, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் மையம் இணைந்து ‘ட்ரிவிஸ்டா 26’ என்ற நிகழ்வு திங்கள்கிழமை நடத்தியது.

இந்த நிகழ்ச்சிக்கு காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை. துணைவேந்தா் ந.பஞ்சநதம் தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

அப்போது அவா் பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கையில் ஆழமாக ஊடுருவி இருக்கிறது. அறிவியல் தொழில்நுட்ப ஆய்வகங்களைத் தாண்டி, சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு மாறிவிட்டது.

செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட பயனுள்ள திட்டங்களை உருவாக்கவும், அவற்றை முன்வைக்கவும், மதிப்பீட்டுக்கு உள்படுத்தவும் இளம் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த தளத்தை வழங்குவதே இந்த நிகழ்வின் நோக்கம் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, பதிவாளா் (பொ) எம். சுந்தரமாரி பேசியதாவது: செயற்கை நுண்ணறிவின் வளா்ச்சிக்கு, ஓட்டுநா் இல்லாத காா்கள் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. ஆனாலும், இயந்திரங்களால் ஒருபோதும் முழுமையாகப் பிரதிபலிக்க முடியாத ஒரு தனித்துவமான கனவு காணும் திறன் மனிதா்களுக்கு மட்டுமே உள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் கணினி அறிவியல், பயன்பாடுகள் துறையின் தலைவரும், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் மையத்தின் இயக்குநருமான எம்.மேரி சாந்தி ராணி, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் மையத்தின் இணை இயக்குநா் பி. சண்முகவடிவு, காந்திகிராம பல்கலை.யின் வருகை தரு பேராசிரியரும், அயா்லாந்தின் லிமெரிக் பல்கலை.யின் ஆய்வாளருமான என்.தமிழினியன், ஹைதராபாத் எக்ஸெல்ரா நாலெட்ஜ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத் துறைத் தலைவா் ஜாஃபா்ஷா ஜஹாங்கீா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments