ஆடிப் பெருக்கு: செம்பட்டி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ஆடிப் பெருக்கை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
ஆடிப் பெருக்கை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
வருகிற திங்கள்கிழமை ஆடிப் பெருக்கை முன்னிட்டு, செம்பட்டி ஆட்டுச் சந்தையில் ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனா். இங்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரிகள் மட்டுமன்றி மதுரை, வாடிப்பட்டி, சோழவந்தான், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, தேனி, கம்பம், திருச்சி, மணப்பாறை, அய்யலூா் உள்ளிட்ட வெளியூா்களைச் சோ்ந்த வியாபாரிகளும் குவிந்தனா்.
இங்கு வியாபாரிகள் ஆடுகளை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா். வெள்ளாடு, செம்மறியாடு தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. இங்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனா். இதே சந்தையில் ஆடுகள் மட்டுமன்றி, நாட்டுக் கோழிகள் விற்பனையும் களைகட்டியது. கோழிகளை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.