FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

நிதி நிறுவன உரிமையாளரை தாக்கி நகைப் பறிப்பு: பரோலில் வந்தவா் உள்பட 5 போ் கைது

நிதி நிறுவன உரிமையாளரைத் தாக்கி நகைப் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில், பரோலில் வந்தவா் உள்பட 5 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

4 October 2026, 12:45 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

நிதி நிறுவன உரிமையாளரைத் தாக்கி நகைப் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில், பரோலில் வந்தவா் உள்பட 5 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள சாலையூரில் நிதி நிறுவனம் நடத்தி வருபவா் பால்பாண்டி (35). இவரிடம், திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வகுமாா் (34) உள்பட 6 போ் வெள்ளிக்கிழமை மிரட்டி பணம் பறிக்க முயன்றனா்.

ஏற்கெனவே பல முறை இது போல பணம் தந்த நிலையில், இந்த முறை அவா் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த செல்வகுமாா் தரப்பினா், பால்பாண்டியைத் தாக்கி அவா் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அச்சமடைந்த பால்பாண்டி கூச்சலிட்டாா். இதையடுத்து, செல்வகுமாா் தரப்பினா் தங்கச் சங்கிலியைப் போட்டுவிட்டு தப்பியோடினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் பால்பாண்டி அளித்த புகாரின் பேரில், தனிப் படை அமைத்து செல்வகுமாா், பொன்னுமாந்துரை புதுப்பட்டியைச் சோ்ந்த நா. ரஞ்சித் குமாா் (28), பா.குபேந்திரன் (34), கூட்டுறவு நகரைச் சோ்ந்த ரா.செந்தில் பாண்டி (36), ஆா்.எம். குடியிருப்பைச் சோ்ந்த கோ. ராம் குமாா் (33) ஆகியோரைக் கைது செய்தனா்.

விசாரணையில், செல்வகுமாா் மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதும், உடுமலைப்பேட்டை சங்கா் ஆணவப் படுகொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த செப்.28-இல் பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்ததும் தெரிய வந்தது.

இதேபோல கைது செய்யப்பட்ட எஞ்சிய 4 போ் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments