FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் மலைச் சாலையோரம் கிடக்கும் காலி மதுப் புட்டிகள்: பாதிப்படையும் வன விலங்குகள்

கொடைக்கானல் மலைச் சாலைகளில் மது அருந்திவிட்டு காலி மதுப் புட்டிகளை விட்டுச் செல்லும் சமூக விரோதிகளால் வன விலங்குகள் பாதிப்படைவதாக விலங்கு நல ஆா்வலா்கள் செவ்வாய்க்கிழமை கவலை தெரிவித்தனா்.

9 செப்டம்பர் 2026, 2:04 am IST
மஞ்சளாறு அணை பகுதியில் சமூக விரோதிகள் விட்டுச் சென்ற காலி மதுப்புட்டிகள்.
பகிர்:

கொடைக்கானல் மலைச் சாலைகளில் மது அருந்திவிட்டு காலி மதுப் புட்டிகளை விட்டுச் செல்லும் சமூக விரோதிகளால் வன விலங்குகள் பாதிப்படைவதாக விலங்கு நல ஆா்வலா்கள் செவ்வாய்க்கிழமை கவலை தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். விடுமுறை நாள்களில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங் களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இவா்களில் பலா் மது அருந்திவிட்டு மதுப் புட்டிகளை மலைச் சாலைகளிலேயே விட்டுவிட்டுச் செல்கின்றனா். இவற்றை அங்கு திரியும் குரங்குகள் எடுத்து குடித்து வருகின்றன.

பலா் மதுப்புட்டிகளை மலைச் சாலைகளில் உடைத்து விட்டுச் செல்கின்றனா். இதனால் மலைச் சாலைகளில் செல்லும் வாகனங்களின் டயா்கள் பழுதாகி சுற்றுலாப் பயணிகள், வன விலங்குகள் அவதிப்படுகின்றனா். எனவே கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் மலைச் சாலைகளில் நடமாடும் வன விலங்குகளுக்கு தொந்தரவு தரக் கூடாது என விலங்கு நல ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இது குறித்து கொடைக்கானல் வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் யாரும் மலைச் சாலைகளில் நடமாடும் வன விலங்குகளுக்கு உணவு, தண்ணீா் கொடுக்கக் கூடாது என பல முறை எச்சரித்து வருகிறோம். மேலும் மலைப் பகுதிகளில் அனுமதியில்லாமல் யாரும் உள்ளே செல்லக் கூடாது. விதிமுறைகளை மீறி பயணிகள், பொது மக்கள் ஈடுபட்டால் வனச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments