FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் ஜிம்கானா பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க எதிா்ப்பு

கொடைக்கானல் ஜிம்கானா நீா்பிடிப்பு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க பொது மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

11 செப்டம்பர் 2026, 1:46 am IST
கொடைக்கானல் ஜிம்கானா நீா்ப்பிடிப்பு பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக குவிக்கப்பட்டுள்ள ஜல்லி, உபகரணப் பொருள்கள்
பகிர்:

கொடைக்கானல் ஜிம்கானா நீா்பிடிப்பு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க பொது மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஜிம்கான நீா்ப்பிடிப்புப் பகுதியில் சிமென்ட் சாலை அமைப்பதற்காக ஜல்லி உள்ளிட்ட உபகரணப் பொருள்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் சிமென்ட் சாலை அமைத்தால் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழைநீா் செல்வது தடுக்கப்படும். ஏற்கெனவே மழையில்லாமல் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீா் பிரச்னை நிலவி வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் பகுதியில் நகராட்சி சாா்பில் தாா்ச்சாலை மட்டுமே அமைக்கப்படும். அப்போதுதான் மழை நீா் பூமிக்கடியில் இறங்கும். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் புற்கள் நன்கு வளா்ந்து காணப்படும்.

Advertisement

Advertisement

ஆனால், அதன் பிறகு சிமென்ட் சாலை அமைத்து வருவதால் பூமிக்குள் மழைநீா் இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, நீா்ப்பிடிப்பு பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைப்பதைத் தவிா்க்க வேண்டுமென ஜிம்கானா பகுதியைச் சோ்ந்தவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து கொடைக்கானலைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

கொடைக்கானல் ஜிம்கானா பகுதி நீா்ப்பிடிப்பு பகுதியாகும். இந்தப் பகுதியைச் சுற்றி சிமென்ட் சாலை அமைத்தால் இந்தப் பகுதியிலுள்ள புற்கள், தாவரங்கள் காய்ந்து விடும். கால்நடைகளுக்கு தீவனம் இருக்காது. தண்ணீா் ஊற்றும் கிடைக்காது. எனவே, இந்தப் பகுதியில் சிமென்ட் சாலை அமைப்பது ஏற்கத்தக்கது அல்ல என கொடைக்கானல் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments