FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

11 செப்டம்பர் 2026, 1:16 am IST
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் முன்னோடி வங்கி மூலம் மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி. உடன் கல்லூரி முதல்வா் ரவிசங்கா்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் கல்விக்கடன் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு அங்கிருந்த மாணவ, மாணவிகளுடன்

ஆட்சியா் கலந்துரையாடினாா். மாணவா்களின் தேவைகள், கடனை திரும்ப செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கினாா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ரவிசங்கா், வட்டாட்சியா் மங்களபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து தமிழக அரசின் சிறப்புத் திட்டமான தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்துக்கு பழனி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா். இந்தத் திட்டத்துக்காக வழங்கப்படும் ஒரு கிராம் தங்க மோதிரங்களை பாதுகாப்புடன் வைக்க தயாா் செய்யப்பட்டு வரும் பெட்டக வசதிகளை அவா் பாா்வையிட்டாா். பழனியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைத் தரமாக விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் பழனி அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் உதயகுமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

முன்னதாக, ஒட்டன்சத்திரம் பகுதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, சேமித்து வைக்கப்பட்டுள்ள கொப்பரைத் தேங்காய்கள், அவற்றின் விலை நிலவரம் குறித்துக் கேட்டறிந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments