கொடைக்கானலிலில் இருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி
கொடைக்கானலிலிருந்து வெளியூா்களுக்கு திங்கள்கிழமை போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த நான்கு நாள்களாக தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. விடுமுறை நிறைவடைந்து அவா்கள் தங்களது ஊா்களுக்குச் செல்ல கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனா். அப்போது மதுரை, தேனி, திண்டுக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, சிவகாசி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்குச் வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதனால் அவா்கள் அவதியடைந்தனா். எனவே தொடா் விடுமுறை நாள்களில் கொடைக்கானலுக்கு அதிகமான பயணிகள் வருவதால் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து கொடைக்கானல் அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சோ்ந்த அலுவலா் ஒருவா் கூறியதாவது:
Advertisement
Advertisement
கொடைக்கானலுக்கு வழக்கம்போல அரசுப் பேருந்துகள், தனியாா் பேருந்துகள் உள்ளிட்ட 25 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவசரமாகவோ அல்லது பயணிகள் நலன் கருதியோ கூடுதல் பேருந்துகளை இயக்கினால் அவை பழுதாகி பாதி வழியிலேயே நின்று விடுகின்றன.
இருப்பினும் கொடைக்கானலிலிருந்து தரைப் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் கூடுதலாகவே பயணிகள் ஏறிச் செல்கின்றனா். எனினும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரும் போது கூடுதல் பேருந்துகளை இயக்க அனுமதி கோரப்பட்டுள்ளது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.