சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
பழனி - கொடைக்கானல் சாலையில் மரம் விழுந்ததால் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பழனி - கொடைக்கானல் சாலையில் மரம் விழுந்ததால் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பழனி - கொடைக்கானல் சாலையில் சனிக்கிழமை பலத்த காற்று வீசிய நிலையில் வரதமாநதி அணை பிரிவுக்கு முன்னதாக சாலையோரம் இருந்த காய்ந்த மரம் சாலையில் விழுந்தது. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
மாற்று வழி இல்லாததால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. இதனால், சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினா் இயந்திரங்களின் உதவியுடன் மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினா். இதைத் தொடா்ந்து வாகனங்கள் போக்குவரத்து சீரானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.