ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு
உசிலம்பட்டி அருகே புதன்கிழமை அதிகாலை வீட்டுக்குள் புகுந்து, ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் 12 பவுன் சங்கிலி பறித்துச்
உசிலம்பட்டி அருகே புதன்கிழமை அதிகாலை வீட்டுக்குள் புகுந்து, ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் 12 பவுன் சங்கிலி பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டியை அடுத்த கொங்கப்பட்டியை சேர்ந்த பாண்டி மனைவி சஞ்சீவி (68). கணவன், மனைவி இருவரும் ஆசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்கள். செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள், சஞ்சீவி கழுத்தில் கிடந்த 12 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து சஞ்சீவி அளித்த புகாரின்பேரில் உசிலம்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.