FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பாஜகவின் 8 ஆண்டு சாதனைகள்: தமிழக மக்களுக்கு வேதனைகள்; கே.பாலகிருஷ்ணன்

பாஜகவின் 8 ஆண்டு சாதனைகள் என்பது தமிழக மக்களுக்கு வேதனைகள் என்று  கே.பாலகிருஷ்ணன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜூன் 2022, 6:37 pm IST
பகிர்:

மதுரை: பாஜகவின் 8 ஆண்டு சாதனைகள் என்பது தமிழக மக்களுக்கு வேதனைகள் தான், பாஜகவின் இன்னும் இரு ஆண்டுகள் ஆட்சியில் என்னவெல்லாம் நடக்கபோகிறதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர் என்று  கே.பாலகிருஷ்ணன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற தீக்கதிர் நாளிதழின் வைரவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது;

மோடி அரசு பத்திரிகை சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கின்றது. உள்நாட்டில் நடப்பது தெரியாமல் வெளிநாடுகளில் ஜனநாயகம் இல்லை என பேசிவருகிறார். பாஜக அரசு பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குகிறது. நாடாளுமன்றத்தில் ஜனநாயக உரிமையை மிதிக்கிறது எனவே ஜனநாயகம் குறித்து மோடிக்கு பேச தகுதி இல்லை.

Advertisement

Advertisement

பாஜகவின் 8 ஆண்டு சாதனைகள் என்பது தமிழக மக்களுக்கு வேதனைகள் தான், பாஜகவின் இன்னும் இரு ஆண்டுகள் ஆட்சியில் என்னவெல்லாம் வேதனை நடக்கபோகிறதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

ஜனநாயகத்திற்காக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கைது செய்யும் அவலம் தொடர்கிறது. ஐவுளி தொழிலை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றது தான் மோடி அரசின் சாதனை எனவும், ஜனநாயத்திற்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது பாராட்டுதலுக்குரியது. இதேபோன்று குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பழைய பென்சன் திட்டம் ஆகியவற்றை விரைவாக நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களின் கோரிக்கையை முதல்வர் தலையிட்டு நிறைவேற்ற வேண்டும். பள்ளிக்கல்வித்துறை காலிப்பணியிடங்களை தற்காலிக பணியிடமாக நிரப்புவது வேதனை அளிக்கிறது. தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.

அதிமுகவில் ஏற்பட்ட பிரச்னையை பெற்ற அதிகமாக பேச தேவையில்லை. ஒற்றைத்தலைமை குறித்து சண்டைபோடும் அதிமுக, மோடி அரசின்கீழ் நடைபெறும் மக்கள் விரோத திட்டங்களை பற்றி ஏன் எதிர்த்து பேசுவதில்லை. பாஜகவின் மக்கள் விரோத திட்டங்களுக்கு வெண்சாமரம் வீசி அதிமுகவினர் வரவேற்கின்றனர் என குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் பாஜகவிற்கு 25 சீட் கிடைக்கும் என்ற அண்ணாமலை பேசுவது பொய்யான நம்பிக்கை. பாஜக - அதிமுக கூட்டணிக்கு அடுத்தடுத்து தோல்வி தான் கிடைக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதிலும் தோற்கவுள்ள கட்சியான பாஜக கட்சி தமிழகத்தில் மட்டும் எப்படி வெற்றிபெறும் என கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments