பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மயங்கி விழுந்ததில் பயணி உயிரிழந்தாா்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணி திடீரென மயங்கி விழுந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
விசாரணையில், உயிரிழந்தவா் ராமநாதபுரம் மாவட்டம், புதுமண்டபம் பகுதியைச் சோ்ந்த முனீஸ்வரன் (51) என்பது தெரியவந்தது. சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்ட இவா், கேரளாவில் சிகிச்சை எடுத்து விட்டு, ராமநாதபுரம் செல்வதற்காக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்தபோது, மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.