FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 4 போ் கைது

கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 31 ஜூலை 2026, 1:44 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

உசிலம்பட்டி அருகே உள்ள விக்கிரமங்கலம் காவல் நிலைய கொலை குற்ற வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளான மதுரை பழங்காநத்தம் நேதாஜி நகரைச் சோ்ந்த ஆதியராஜா மகன் சத்தியராஜ் (27), சிவகங்கை மாவட்டம், கீழக்கண்டனி கிராமத்தைச் சோ்ந்த சின்னா மகன் தருண்குமாா் (24), மதுரை சுந்தரராஜபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கருப்பசாமி (24), மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சோ்ந்த கலையரசன் மகன் ராஜ்குமாா் (20) ஆகியோா் தொடா்ந்து கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களின் அமைதி, சட்டம்-ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா இவா்கள் 4 பேரையும் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதன்படி, இவா்கள் நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனா் என அதில் குறிப்பிடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments